எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 5உருளைக் கிழங்கு
  3. 1 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது, சோம்பு
  4. 1பச்சை மிளகாய்
  5. 2 வெங்காயம்
  6. 2 தக்காளி
  7. 1பட்டை 2 பிரிஞ்சி 4 கிராம்பு 1பூ 2 ஏலக்காய்
  8. 1 ஸ்பூன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா
  9. 2 ஸ்பூன் மல்லித்தூள்
  10. 5 ஸ்பூன் எண்ணெய்
  11. சிறிதளவுஉப்பு
  12. 2 சில்தேவைப்பட்டால் தேங்காய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை தோலை உரித்து வெட்டி வைத்துக் கொள்ளவும் வெங்காயம், தக்காளியை அறுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    சிக்கனை நன்றாக கழுவி தயிர், மஞ்சள்த்தூள்ச் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்கவும் பின் கழுவிக் கொள்ளவும்

  3. 3

    ஒருக் கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய், பூ, பட்டை, பிரிஞ்சி இலை,ஏலக்காய்,சோம்பு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பின் உருளைக்கிழங்குச் சேர்க்கவும் (இடையில் துண்டுகளாக வெட்டிய தேங்காய்சில் சேர்க்கவும் நான் சேர்க்க வில்லை) பின் தக்காளி மற்றும் உப்புச் சேர்க்கவும்

  6. 6

    அனைத்தையும் நன்றாக வதக்கியப்பின் மஞ்சள்தூள் மல்லாத்தூள் கரம்மசாலா மிளகாய்த்தூள்ச் சேர்த்து வதக்கவும்

  7. 7

    வதங்கியதும் சிறிது தண்ணீர்ச் சேர்க்கவும் கிளரி விட்டுக் கொள்ளவும்

  8. 8

    ஒருக் கொதி வரும்வரை பொறுத்திருக்கவும் கொதிக்க தொடங்கியது

  9. 9

    கொதித்ததும் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளரிவிடவும் பின் நன்றாக கொதித்து வேக ஆரம்பிக்கும்

  10. 10

    பின் நன்றாக வெந்ததும் பரிமாறவும் சிக்கன் கிரேவி தயார் கன்னியக்குமாரி மக்களின் ஸ்பெஷல் சிக்கன் கிரேவி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes