எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2 பரோட்டா
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 பச்சைமிளகாய்
  5. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  6. 1 முட்டை
  7. காரத்திற்கேற்பமஞ்சள், மிளகாய், கரம்மசாலா, மிளகுத்தூள்
  8. தேவையான அளவு எண்ணெய் (அ) நெய் மற்றும் உப்பு
  9. கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பரோட்டாவை சிறிதாகவும் இல்லாமல் பெரிதாகவும் இல்லாமல் வெட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இது தோசைக்கல்லில் செய்தால் ஹோட்டல் சுவையில் வரும் கல்லைச் சூடேற்றிக் கொள்ளவும் எண்ணெய் (அ) நெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் வெங்காயம்ச் சேர்க்கவும்

  3. 3

    அதன் மேல் பச்சைமிளகாய், இஞ்சிப்பூண்டு விழுது, உப்புச் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் கருவேப்பிள்ளைச் சேர்த்து கொண்டு வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் பின் தக்காளியைச் சேர்த்து பின் குத்தி குத்தி மசித்து விடவும்

  5. 5

    மசிந்ததும் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும் அதனை கிளறாமல் 2 sec விட்ட பின் அதன் மேல் பரோட்டத்துண்டுகளைப் போடவும்

  6. 6

    பின் ஒரு முறை கலந்து விட்டு இரண்டு கரண்டிகள் (அ) ஒரு க்ளாஸ் வைத்து குத்தி விடவும் பின் மல்லி இலைகளைச் சேர்த்து கொத்தி விட்டு இறக்கி பரிமாறவும்

  7. 7

    சுவையான செட் பரோட்டா தயார் செய்துப் பார்த்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes