*ஹரியாலி வெஜ் கிரேவி*

#PT
இது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
மிளகு, சீரகம், ப. மிளகாய், சோம்பு, கொத்தமல்லி தழை, தயிர் சேர்க்கவும்.
- 4
பிறகு மைய அரைக்கவும்.
- 5
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும், பூண்டை நன்கு வறுக்கவும்.
- 6
அடுத்து இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
- 7
பிறகு, வெங்காயம், ம.தூள், மி.தூள், தனியா தூள், உப்பு, போட்டு கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 8
அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
பின், கரம் மசாலா தூள், தண்ணீர் சேர்த்து, கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 10
மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி, பௌலுக்கு மாற்றவும்.
- 11
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ஹரியாலி வெஜ் கிரேவி*தயார்.இது சப்பாத்தி, பூரி, நாண், ருமாலி பரோட்டாவிற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். செய்து பார்த்து என்ஜாய் பண்ணவும்.
- 12
குறிப்பு:- தனியா தூள், கரம் மசாலா தூளுக்கு பதில், மிக்ஸி ஜாரில், தனியா 1 ஸ்பூன், பட்டை 1 துண்டு, கிராம் 2, ஏலக்காய் 1 சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம். வீட்டில் செய்த தனியா தூள், கரம் மசாலா தூள் இருந்ததால் நான் அப்படியே சேர்த்தேன். சுவையாக இருந்தது. இது அவரவர் விருப்பம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*


*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)


*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*


*கடப்பா காரச் சட்னி*


* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)


*மாதுளம் பழ ரசம்*


*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)


*மாங்காய் மசியல்*


*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)


*கத்தரிக்காய் வறுவல்*


*தேங்காய் பால் சாதம்*


*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*


*மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)


*ஒன்பாட் ரசம் சாதம்*


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)


*பச்சை மாங்காய் குழம்பு*


*முருங்கைக்காய் பால் கறி*


*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)


*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*


*வாழைக்காய் வறுவல்*


*ஜிஞ்சர் ரசம்*


கேரட் சாதம்


*கத்தரிக்காய் தொக்கு*


*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)


*வாட்டர் மெலோன் குல்ஃபி* (சம்மர் ஸ்பெஷல்)


*மைசூர் சட்னி*


*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*

கமெண்ட் (2)