இஞ்சி தீயல்/ இஞ்சி கறி

Viffy victor
Viffy victor @cook_18678401

இது உண்மையிலேயே ஒரு கேரள ரெசிபி ஆகும்..ஆனால் இது கன்னியாகுமரியில் கேரளாவை ஒட்டிய ஊர்களிலும் அதிகம் பாரம்பரியமாக செய்யப்படுகிறது...இது செரிமானத்திற்கு உதவுகிறது..மிகவும் சுவை மிகுந்த இது செய்து வைத்து நேரம் ஆக ஆக இன்னும் சுவை அதிகமாகும்..நீங்களும் செய்து பாருங்கள்..சோறும் காலி ஆகிவிடும்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப்நறுக்கிய இஞ்சி
  2. 1 கப்துருவிய தேங்காய்
  3. 10சின்ன வெங்காயம்
  4. ஒரு கொத்துகருவேப்பிலை
  5. 2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  6. 1 1/2 டேபிள் ஸ்பூன்மல்லி தூள்
  7. தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதாவது எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1/4 டீஸ் ஸ்பூன்முளு வெந்தயம்
  10. 1/2 டீஸ் ஸ்பூன்சீரகம்
  11. 1/2 டீஸ் ஸ்பூன்கடுகு
  12. ஒரு எலுமிச்சை அளவுபுளி
  13. 1/2டீஸ் ஸ்பூன்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சியை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். பின் ஆற விடவும்.

  2. 2

    அதே கடாயில் தேங்காய், சின்ன வெங்காயம்,வெந்தயம்,சீரகம் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுக்கவும்..பின் மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போக சில வினாடி வறுக்கவும்...பின் ஆற விடவும்...

  3. 3

    ஆறிய இஞ்சியையும் தேங்காயையும் சிறுது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைதெடுக்கவும்...

  4. 4

    மண்சட்டியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, காயத்தூள் சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்...உப்பு சேர்க்கவும்...

  5. 5

    பின் புளி தண்ணீர், 1 கப் தண்ணீர் சேர்த்து 10 இருந்து 15 நிமிடம் கொதிக்க விடவும்..

  6. 6

    கொதித்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் தீயை அணைக்கவும்.. தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Viffy victor
Viffy victor @cook_18678401
அன்று

Similar Recipes