பொங்கல் கறி விருந்து-மட்டன் பிரியாணி, எலும்பு சாம்பார் குழம்பு, முட்டை கிரேவி,சிக்கன் ப்ரை

#பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் பிரியாணி செய்ய:: குக்கரில் மட்டன், சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5-6 விசில் வைத்து கொள்ள வும்.பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
இப்போது வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது (இஞ்சி, பூண்டு, ஏலக்காய், வெங்காயம், பட்டை,சோம்பு, கிராம்பு)சேர்த்து கிளறவும்
- 3
3 நிமிடம் பின் புதினா சேர்த்து கிளறவும். இப்போது தக்காளி, தயிர்,மல்லி தூள், பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
- 4
இப்போது மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறவும். சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சரி பார்த்து கொள்ள வேண்டும்
- 5
அரிசியை சேர்த்து கொதித்த பின்னர் மூடி இட்டு வேக விடவும் 15 நிமிடம் பின்னர் சுவையான மட்டன் பிரியாணி தயார்.சிறிது கிளறிய பின் 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்
- 6
எலும்பு சாம்பார் குழம்பு:::குக்கரில் எலும்பு மற்றும் பருப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின்னர் அடுப்பில் கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து கொள்ளவும்
- 7
பின்னர் பூண்டு, குக்கரில் வேக வைத்த எலும்பு, பருப்பு மற்றும் அதிலுள்ள தண்ணீர் சேர்த்து கிளறவும்.தக்காளி மற்றும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கை காய் சேர்த்து கொள்ளவும்
- 8
இப்போது மிளகாய் தூள், சாம்பார் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் குழம்பை வேக விடவும்.பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 9
தாளித்து இதனை குழம்பில் ஊற்றி கிளறி 10 நிமிடம் பின் அடுப்பை அணைத்து விட்டால் சுவையான எலும்பு சாம்பார் தயார்
- 10
முட்டை கிரேவி::::பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டை சேர்த்து 15 நிமிடம் வேக விட்டு முட்டையை கத்தி வைத்து லேசாக கீறி வைக்க வேண்டும்.
- 11
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் சிறிது தக்காளி,மிளகாய் தூள், சிக்கன் தூள் சேர்த்து கிளறவும்.2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கிளறவும்
- 12
இப்போது வேக வைத்த முட்டைகளை கடாயில் சேர்த்து மசாலாவில் ஒட்டும் படி கிளறவும். சுவையான முட்டை கிரேவி தயார்.
- 13
சிக்கன் ப்ரை::::பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிக்கன் பொடி சேர்த்து கிளறி 20 நிமிடம் ஊற விடவும்.
- 14
கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக பொரித்து எடுக்கவும். பொரித்து பின் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால் சுவையான சிக்கன் ப்ரை தயார்
- 15
தயிர் பச்சடி ::::பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய்,துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைக்க வேண்டும்
- 16
பொங்கல் கறி விருந்து மட்டன் பிரியாணி, எலும்பு சாம்பார் குழம்பு, முட்டை கிரேவி,சிக்கன் ப்ரை மற்றும் தயிர் பச்சடி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் பிரியாணி சிக்கன் கிரேவி


சாம்பார் சாதம்


சிக்கன் கிரேவி & சிக்கன் 65


மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்


கார குழம்பு / curry receip in tamil


முருங்கை காய் சாம்பார்


மட்டன் குக்கர் பிரியாணி


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)


மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)


ஆட்டு எலும்பு குழம்பு (aatu Elumbu Kulambu Recipe in tamil)


மட்டன் எலும்பு தாளிச்சா


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(brinjal sambar recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்(sambar recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார் (Murunkaikaai sambar Recipe in Tamil)


முருங்கை காய் மீன் குழம்பு


சிக்கன் கறி தோசை (chicken kari dosai recipe in tamil)


தலைப்பு : மட்டன் பிரியாணி


மட்டன் எலும்பு குழம்பு


முருங்கை காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


கச கச,முந்திரி மட்டன் குழம்பு Cashew Mutton Gravy Recipe in TAmil


மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)


முட்டை குழம்பு (egg kuzhambu recipe in tamil)


தேங்காய்ப் பால் பிரியாணி மட்டன் தாளிச்சா


சிக்கன் கிரேவி


மட்டன் குழம்பு


பன்னீர் சிக்கன் ப்ரை (Paneer chicken fry recipe in tamil)


மட்டன் சூப்பு


பாய் வீட்டு மட்டன் எலும்பு தால்ச்சா


முருங்கை காய் சாம்பார்

கமெண்ட்