ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு  சிக்கன் ஷவர்மா

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. பீட்டா பிரட் செய்ய:
  2. 3 கப் மைதா
  3. 2 டீஸ்பூன் ஈஸ்ட்
  4. 1 கப் வெந்நீர்
  5. 1 தேக்கரண்டி உப்பு
  6. 1 டீஸ்பூன் சர்க்கரை
  7. 1 டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய்
  8. க்ரில் சிக்கன் செய்ய:
  9. எலும்பில்லாத சிக்கன்-1/2 கிலோ
  10. 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  11. 2+1டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய்
  12. 2 டீஸ்பூன் தயிர்
  13. 1/2 டீஸ்பூன் இஞ்சி பொடி
  14. 1/2 டீஸ்பூன் பூண்டு பொடி
  15. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  16. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  17. 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  18. தேவைக்கேற்ப உப்பு
  19. சாலட் செய்ய:
  20. 1/2 கப் வெங்காயம் மெல்லியதாக நருக்கியது
  21. 1/2 கப் வெள்ளரிக்காய்
  22. 1/2 கப் கேரட்
  23. 2 டேபிள் ஸ்பூன் வினிகர்
  24. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  25. தேவைக்கேற்ப உப்பு
  26. கார்லிக் மயோ சாஸ் செய்ய:
  27. 4 டேபிள் ஸ்பூன் மயோ
  28. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  29. 2 டீஸ்பூன் பூண்டு(பொடியாக நறுக்கியது)
  30. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  31. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பீட்டா பிரேட்:ஒரு கிண்ணத்தில், ஈஸ்ட் சேர்த்து,வெதுவெதுப்பான நீர் ஊற்றி 3 நிமிடம் வைக்கவும்.

  2. 2

    ஒரு பௌலில் மைதா,உப்பு,சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த ஈஸ்ட் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    2மணி நேரம் கழித்து, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, துணியால் முடி மேலும்30 நிமிடம் வைக்கவும்.

  4. 4

    உருண்டைகளை தேய்த்து மிதமான சூட்டில் தவாவில் போட்டு எடுக்கவும்.

  5. 5

    சிக்கன் செய்வதற்கு:ஒரு பௌலில் நீட்டமாக வெட்டிய சிக்கன் துண்டுகள், உப்பு,ஒலிவ் எண்ணெய்,சோயா சாஸ்,எலுமிச்சை சாறு, தயிர்,இஞ்சி பொடி,பூண்டு பொடி, மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி 1மணி நேரம் ஊற வைக்கவும்.

  6. 6

    பின் க்ரில் பானில்,கொஞ்சம் ஒலிவ் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

  7. 7

    கார்லிக் மயோ செய்வதற்கு:ஒரு பௌலில் மயோ,பூண்டு,மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  8. 8

    சாலட் செய்வதற்கு:ஒரு பௌலில் நீட்டமாக வெட்டிய வெள்ளரிக்காய், கேரட்,வெங்காயம்,வினிகர்,உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

  9. 9

    ஷாவர்ம செய்ய:பீட்டா பிரடியில் கார்லிக் மயோ,தக்காளி சாஸ் தடவி சாலட் அதன் மேல் வைத்து,பின் க்ரில் செய்த சிக்கனை வைத்து சுருட்டவும்.

  10. 10

    இதை போல எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.சுவையான ஹோட்டல் ஸ்டைல் க்ரில் ஷாவர்ம ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes