6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4பேர்கள்
  1. 4பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. 4வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
  3. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2கப் பிரட் கிரம்ஸ்
  6. 1/2கப் நொறுக்கிய நூடுல்ஸ்
  7. 4ஸ்பூன் கார்ன் ப்ளார்
  8. 2ஸ்பூன் மைதா
  9. 2வெங்காயம்
  10. 1குடை மிளகாய்
  11. 1ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  12. 1ஸ்பூன் சோயா சாஸ்
  13. 1கப் மைதா
  14. 1ஸ்பூன் ஓமம்
  15. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  16. பொரிப்பதற்கு எண்ணெய்
  17. தேவையானஅளவு உப்பு
  18. 1/2கப் பஜ்ஜி போன்டா மிக்ஸ்
  19. 2பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    சமோசா செய்வதற்கு 1கப் மைதா, ஓமம், 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30நிமிடங்கள் வைக்கவும்

  2. 2

    பாக்கெட்ல உள்ள மாதிரி நூடுல்ஸை தயார் செய்து கொள்ளவும்..

  3. 3

    மசித்த கிழங்கு, நூடுல்ஸ், மிளகாய் தூள், 1நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, 2ஸ்பூன் கார்ன் ப்ளார், நூடுல்ஸில் ஏற்கனவே உப்பு இருப்பதால் சிறிது உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    சீஸ் பால்ஸ் செய்ய நூடுல்ஸ் கலவையில் சிறிது எடுத்து நடுவில் சிறிது சீஸ் வைத்து உருட்டி கரைத்து வைத்துள்ள 2ஸ்பூன் மைதா கலவையில் முக்கி எடுக்கவும்

  5. 5

    அதை பிரட் கிரம்ஸில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..

  6. 6

    இப்போது நூடுல்ஸ் சீஸ் பால்ஸ் தயார்..

  7. 7

    நூடுல்ஸ் கலவையில் சிறிது சிறிதாக எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால் போன்டா ரெடி..

  8. 8

    இப்போது சுவையான நூடுல்ஸ் போன்டா தயார்

  9. 9

    நூடுல்ஸ் கலவையை நீளமாக உருட்டி மைதா கலவையில் முக்கி பிரட் கிரம்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் நூடுல்ஸ் கட்லட் தயார்..

  10. 10

    நூடுல்ஸ் கலவையை தட்டையாக தட்டி நடுவில் ஒரு குச்சியை சொருகி மைதா கரைசலில் முக்கி எடுத்து நொருக்கிய நூடுல்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தால் நூடுல்ஸ் பாப்சிக்கல் ரெடி..

  11. 11

    இப்போது சுவையான நூடுல்ஸ் பாப்சிக்கல் தயார்..

  12. 12

    சமோசா மாவில் சிறிது எடுத்து நீளமாக தேய்த்து இரண்டாக வெட்டி சமோசாவாக மடித்து நூடுல்ஸ் கலவையை உள்ளே வைத்து மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..

  13. 13

    இப்போது சுவையான நூடுல்ஸ் சமோசா தயார்

  14. 14

    நூடுல்ஸ் கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு சேர்க்கவும்

  15. 15

    அதனுடன் பெரிதாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதங்கியதும் அதனுடன் வறுத்த நூடுல்ஸ், சோயா சாஸ் சேர்க்கவும்

  16. 16

    அதனுடன் 2ஸ்பூன் தண்ணீரில் கரைத்த கார்ன் ப்ளார் மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலந்து கெட்டி ஆனதும் இறக்கவும்.. இப்போது சுவையான நூடுல்ஸ் மஞ்சூரியன் தயார்..

  17. 17

    நீங்களும் இந்த ஆறு விதமான நூடுல்ஸ் ஸ்நாக்ஸை செய்து பாருங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes